கோலாகலமாக முடிந்த இளவரசர் ஹாரி திருமணம்: கலந்து கொண்டவர்கள் யார் யார்?

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் நடிகை மேகன் மார்கலே திருமணம் நேற்று லண்டலின் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்துகொண்ட சில முக்கிய பிரபலங்கள் யார் யார் என்பதை பார்ப்போம்/

இந்திய நேரப்படி நேற்று மாலை 5.10 மணியளவில் நடந்த இந்திஅ திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் பின்வருமாறு

பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரே
அமெரிக்காவை சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தொழிலதிபரான ஜார்ஜ் க்லூனி – மனைவி அமல் உடன்
இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க நடிகை அபிகெயில் ஸ்பென்சர்
பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் – மனைவி விக்டோரியா உடன்
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் – கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் உடன்
அமெரிக்க தொலைகாட்சி மற்றும் திரைப்பட நடிகை சாரா ராபெர்டி – கணவர் சாண்டு செப்பாலா உடன்
முன்னாள் இங்கிலாந்து ரக்பி வீரர் மற்றும் பயிற்சியாளர் சர் கிளைவ் உட்வார்ட் – மனைவி ஜேன் வில்லியம்ஸ் உடன்
இங்கிலாந்து முன்னாள் ரக்பி வீரர் வில் கிரீன்உட் – மனைவி கரோலின் கிரீன்உட் உடன்
கனடா நடிகர் பாட்ரிக் ஜே ஆடம்ஸ் – மனைவி மற்றும் அமெரிக்க நடிகையான டொரியன் பெல்லிசாரியோ உடன்
இளவரசர் ஹாரியின் முன்னாள் பெண் நண்பர் செல்சி டேவி (ஜிம்பாப்வே)
பிரிட்டன் பாடகி ஜோஸ் ஸ்டோன்
அமெரிக்க பாடகர் மார்கஸ் மம்போர்ட் – மனைவி மற்றும் பிரிட்டன் நடிகையான கேரி முல்லிகன் உடன்

மேலும் இந்த திருமண்த்தை உலகில் உள்ள 80 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *