shadow

cameroonபிரிட்டனில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, அதிக இடங்களை பிடித்து மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலகத்தலைவர்கள் கேமரூனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் மொத்தம் 650 இடங்கள் உள்ளது.  நேற்று அனைத்து தொகுதிகளுக்கு தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இந்திய நேரப்படி இன்று காலை எண்ணப்பட்டது. இதுவரை 540 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 245 இடங்களும், மிலிபாண்ட் தலைமையிலான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 212 இடங்களும்,  நிகோலா ஸ்டர்ஜியன் தலைமையிலான ஸ்காட்டிஷ் தேசிய கட்சிக்கு 55 இடங்களும், பீட்டர் ராபின்சன் தலைமையிலான டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், நிக் க்ளெக் தலைமையிலான லிபரல் ஜனநாயக கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்துள்ளன.

வெற்றி முகத்தில் இருக்கும் பிரதமர் டேவிட் கேமரூன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இன்றைய நாள், முக்கியமான கொண்டாட்ட இரவாக அமைந்தது என்று கூறினார். ஆனால் தேர்தல் முடிவுகளை நம்ப முடியவில்லை என்றும் இந்த முடிவு எதிர்பாராதது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடி மிலிபாண்ட் தேர்தல் முடிவுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply