shadow

david cameroonபிரிட்டன் நாட்டின் பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் தொடங்கியது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறியிருந்த நிலையில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்து சாதனை செய்துள்ளார் பிரதமர் டேவிட் கேமரூன். தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா,இந்திய பிரதமர் மோடி உள்பட உலகத்தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

மொத்தம் 650 இடங்களைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இந்திய நேரப்படி நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படன். மொத்தமுள்ள 650 தொகுதிகள் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிங் கட்சி 331 இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 232 தொகுதிகள் கிடைத்துள்ளது.

மேலும் ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சிக்கு 56 தொகுதிகளும், லிபரல் டெமாக்கரடீஸ் கட்சிக்கு 8 தொகுதிகளூம், டெமாக்கரடிக் யூனியன் கட்சிக்கு 8 தொகுதிகளும் கிடைத்துள்ளது. தனிப்பெரும்பான்கையுடன் ஆட்சி அமைக்க 326 தொகுதிகள் இருந்தாலே போதும் என்கிற நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி 331 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதால் கூட்டணி கட்சிகளில் தயவு இன்றி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply