11

சமீபகாலமாக இந்தியாவை சேர்ந்த பலர் உலகின் பல நாடுகளில் உள்ள முக்கிய பதவிகளை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள முக்கிய பதவிகளில் அதிபர் ஒபாமா பல இந்தியர்களை நியமனம் செய்துள்ளார்.  இந்நிலையில்
பிரிட்டனின் சவுத்வார்க் நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் சோப்ரா என்பவர் பதவியேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

புதுடில்லியை பூர்வீகமாக கொண்ட சுனில் சோப்ரா, பிரிட்டனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் சவுத்வார்க் நகர துணை மேயராகவும் தற்போது  இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி  சவுத்வார்க் நகரின் மேயருக்கான தேர்தல் நடந்தது. அதில் சுனில் சோப்ரா அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் வரும் 7ஆம் தேதி மேயராக பதவியேற்க உள்ளார்.

பிரிட்டனின் சவுத்வொர்க் மேயராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுனில் சோப்ரா பெறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *