தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 3
சின்ன வெங்காயம் – முக்கால் கப்
பெருங்காயம் – சிறிய துண்டு
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் – 10
புளி – சிறிய எலுமிச்சை அளவு

செய்முறை:
கத்தரிக்காயை பாதியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். புளியை வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கத்தரிக்காயை போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். பின் ஒரு தட்டில் ஆறவைத்து தோலை உறிக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல், வெங்காயம், காயம், உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்க வேண்டும். பின் ஊறவைத்த புளி, வதக்கிய கத்தரிக்காய், வறுத்தவை, உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.

Leave a Reply