shadow

108 டன் லாரியின் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்த பாலம். ஒருவர் பலி

bridgeவடக்கு இத்தாலியில் உள்ள பழமையான பாலம் ஒன்றில் கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது வாகனத்தின் எடை தாங்காமல் அந்த பாலம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததால் அந்த பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த கார் மீது பாலம் விழுந்து காரில் சென்று கொண்டிருந்த 68 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தடையை மீறி 108 டன் எடையுடன் கூடிய ஒரு லாரி சென்றதாகவும், அதன் பாரம் தாங்காமல் அந்த பாலம் இடிந்து விழுந்ததாகவும் இதுகுறித்து இத்தாலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கொண்டு வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் பலியான Claudio Bertini என்ற 68 வயது நபர் ஓய்வு பெற்றவர் என்றும் இவரது மறைவால் இவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply