தண்ணீரில் ஓடும் சூப்பர் பைக். பிரேசில் விஞ்ஞானியின் அற்புத கண்டுபிடிப்பு

water bike]பைக் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் போட்டே தங்கள் சம்பளத்தின் பெரும்பகுதியை இழந்திருப்பார்கள். இந்த கஷ்டத்தை கண்டுதான் பிரேசில் நாட்டின் விஞ்ஞானி ஒருவர் வெறும் தண்ணீரில் ஓடும் பைக் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இவருடைய கண்டுபிடிப்பான பைக் ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிமீ-க்கும் ஓடும் தன்மை கொண்டது. மேலும் இந்த பைக் டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. மாறாக, வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

’டி பவர் ஹெச்20’ (T Power H20) என இந்த புதிய மோட்டார் சைக்கிளுக்கு பெயரிட்டுள்ள ரிக்கேர்டோ ஆஸேவெடோ, இதன் செயல்திறன் குறித்த விளக்கத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

இதன்வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் சைக்கிள், ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் மாயாஜாலத்தை ரிக்கேர்டோ ஆஸேவெடோ ஆதாரப்பூர்வமாக நிகழ்த்தியும், நிரூபித்தும் காட்டியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *