shadow

shadow

பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் சொந்த மண்ணில் விளையாடும் பிரேசிலுடன் மோதிய சிலி அணி 2-3 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்து பரிதாபமாக போட்டியில் இருந்து வெளியேறியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் முதல் கோலை பிரேசில் பதிவு செய்த பிரேசில் அணிக்கு சற்று நேரத்தில் சிலி அணி பதிலடி கொடுத்ததால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்தன. அதன்பின்னர்ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் ஏதும் பதிவு செய்ய முடியாமல் தடுமாறின. இரு அணிகளின் கோல் கீப்பர்களும் மிக அற்புதமாக பந்துகளை தடுத்து விளையாடியதால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தது.

பின்னர், அளிக்கப்பட்டஉபரி நேரத்திலும் இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடாததால்  ‘பெணாலிட்டி கிக்’ முறையில் வெற்றியை தேர்ந்தெடுக்க போட்டி நடுவர்கள் முடிவு செய்தனர்.

பிரேசில் ஒரு பெணால்ட்டி அடிக்க சிலியின் பந்து பிரேசில் கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது. பிரேசில் இரண்டாவது கோலை பதிவு செய்ய, பெணாலிட்டியில் முதல் கோலை சிலி பதிவு செய்தது. பிரேசிலின் அடுத்த பெணாலிட்டி கோல் முயற்சியை சிலி தடுத்து ஆட்கொண்டது. தனையடுத்து, சிலியின் கடைசி பெணாலிட்டி கோலை தடுத்த பிரேசில் நாக் அவுட் சுற்றில் சொந்த மண்ணில் வெற்றியை சுவைத்தது. இதன்மூலம் பிரேசில் அணி 3-2 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றாது.

Leave a Reply