shadow

வாட்ஸ் அப் சேவைக்கு 72 மணி நேரம் தடை விதித்த பிரேசில் நீதிபதி.
whatsapp_2542293h
பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற குற்றம் ஒன்றின் வழக்கு விசாரணையில் தகவல் தர வாட்ஸ் அப் மறுத்ததால் அந்நாட்டில் 72 மணி நேரத்துக்கு வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கு தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள செர்ஜிபி நகர நீதிபதியாக பணிபுரிபவர் மார்சல் மாண்டால்வோ. இவர் விசாரணை செய்துவந்த குற்ற வழக்கு ஒன்றுக்காக உரிய தகவல்களைத் தர வாட்ஸ் அப் சேவையை நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் நேற்று காலை முதல் 72 மணி நேரத்திற்கு வாட்ஸ் அப் சேவைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இது குறித்து வாட்ஸ் அப் நிர்வாகம் கூறியபோது, “எங்களிடம் தகவல்கள் இல்லை என்று கூறியும், எங்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக, ஏராளமான பிரேசில் மக்களை வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாமல் தண்டித்துவிட்டனர்.

பொதுமக்கள் அனுப்பும் எந்த தகவலும் எங்கள் சர்வரில் இல்லை. எங்கிருந்து அனுப்பப்படுகிறதோ, அது சென்று சேரும் இடத்தில் மட்டுமே அந்த தகவல் இருக்கும். வேறு யாராலும் நாங்கள் உள்பட அதைப் படிக்க முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply