கமல்ஹாசனுக்கு பிராமணர் சங்கம் கண்டனம்! ஏன் தெரியுமா?

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்த முயன்றாலும் அது மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. எனவே தற்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி தன்னுடைய பெயர் ஊடகங்களில் இருக்கும்படி பார்த்து கொள்கிறார். அவற்றின் ஒரு பகுதியாக சமீபத்தில் டுவிட்டரில் அவர் கலந்துரையாடியபோது பூணூல் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய பதிலை கூறினார்.

அதாவது ‘நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு பதிலை கமல் கூறினார். அவர் கூறியது இதுதான்: ‘நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்’ என்று கமல் தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பூணூல் குறித்து கீழ்த்தரமாக விமர்சித்த பிராமணகுல துரோகி நடிகர் கமல்ஹாசனை கண்டிக்கின்றோம் என்றும், பூணூலை குறைசொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் நடிகர் கமலுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தேவர் மகன், விருமாண்டி என்று பிற ஜாதிகளை போற்றி படமெடுத்த கமல், ஜாதி ஒழிப்பு குறித்து பேசுவது நாடகம் என்றும், தைரியம் இருந்தால் பிற ஜாதியை அவர் விமர்சனம் செய்து பார்க்கட்டும் என்றும் கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *