shadow

ஓலியைவிட வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி.
bhrahmos
இந்தியா கடந்த சில வருடங்களாக ஏவுகணை செலுத்துவதில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் இன்று ஒலியைவிட அதிக வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன்கொண்ட பிரம்மோஸ் என்ற ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதனால் உலக அளவில் இந்தியாவின் பெருமை மேலும் உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் என்ற இடத்தில் இருந்து சரியாக மதியம் 1 மணியளவில் செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட திசையில் மிகத்துல்லியமாக சென்று இலக்கை தாக்கியது. இதை பாதுகாப்பு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த ஏவுகணை மொபைல் அட்டானமஸ் லாஞ்சர் (Mobile Autonomous Launcher) மூலம் செலுத்தப்பட்டது. ஏவுகனை வெற்றிகரமாக செலுத்திய பின்னர் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் சுதிர் மிஹ்ரா செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்திய ராணுவத்தில் உள்ள ஏவுகணைகளில் மிக துல்லியமாக இலக்கை தாக்குவதில் பிரம்மோஸ் ஏவுகணை சிறப்பிடம் பெற்றுள்ளது” என்றார்.

8.4 மீட்டர் நீளம் உள்ள இந்த ஏவுகணையானது ஒலியை விட 2.9 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது. 290 கிலோமீட்டர் தூரம் பாயக் கூடியது. இந்த ஏவுகணையில் 300 கிலோ வெடிபொருட்களை பொருத்த முடியும். ரேடார்களின் கண்காணிப்பில் சிக்காமல் மிகவும் தாழ்வாகப் பறக்கும். நிலம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் ஆகியுவற்றிலிருந்து இதை ஏவலாம்.

Leave a Reply