shadow

9 12 வயது சகோதரியின் மானத்தை காப்பாற்ற போராடிய 8 வயது சிறுவன் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா என்ற நகரத்தில் நடந்துள்ளது.

விர்ஜினியா நகரில் உள்ள ரிச்மாண்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் 8 வயது சிறுவனும், அவனது 12 வயது சகோதரியும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன் தனது சகோதரியுடன் தவறாக நடப்பதையும், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயலுவதையும் பார்த்து ஆத்திரமடைந்தான். உடனே அந்த இளைஞனை அவன் தாக்க தொடங்கினான்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் 8 வயது சிறுவனை தூக்கில் பாறையில் மோதி கொலை செய்தான். இதை தூரத்தில் இருந்து அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த சிலர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சிறுவன் மரணம் அடைந்திருந்தான். காவல்துறையினர்களையும் கூட்டத்தையும் பார்த்த அந்த மர்ம இளைஞன் தப்பியோட முயற்சி செய்தபோது பிடிபட்டு கைது செய்யப்பட்டான்.

9அ

8b

Leave a Reply