shadow

ரூ.32 கோடி மதிப்பில் அதிநவீன காரை வாங்கிய விளையாட்டு வீரர்

shadow

பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃபிளாட் மேவெதர் (Floyd Mayweather) என்பவர் மிக விலையுயர்ந்த கார் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு $4.8 மில்லியன் ஆகும் இந்திய மதிப்பில் இந்த தொகை சுமார் ரூ.32 கோடி ஆகும்.  Koenigsegg CCXR Trevita என்று கூறப்படும் இந்த உலகிலேயே இரண்டு மட்டுமே உள்ளது. அதில் ஒன்றை இவர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிமேன் ( ‘Money Man) என்று அழைக்கப்படும் ஃபிளாட் மேவெதர் தனது புதிய காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். உலகிலேயே மிக அதிகமாக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் இவதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வருடத்திற்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வாங்கியுள்ள இந்த புதிய Koenigsegg CCXR Trevita என்ற கார் மணிக்கு 250 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

Leave a Reply