shadow

சிவகார்த்திகேயனுக்கு முன்னாள் இருப்பதி அஜித் விஜய் மட்டுமே!

சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தை, சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் முடியறிடித்துள்ளது. இன்னும் அஜித், விஜய் சாதனைகளை மட்டுமே சிவகார்த்திகேயன் முறியடிக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழ் சினிமாவில் ஓப்பனிங் வசூலில் அஜீத், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவர் ‘வேலைக்காரன்’ படம் ஓப்பனிங் வசூல் மூலம் பாக்ஸ் ஆபிஸில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜீத்திற்கு பிறகு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. கடந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’, ‘மெர்சல்’, ‘விவேகம்’ படத்தை தொடர்ந்து ‘சிங்கம் 3’ இருந்தது. ஆனால், ‘சிங்கம் 3’ தமிழக வசூலை ‘வேலைக்காரன்’ பின்னுக்கு தள்ளியுள்ளது. ‘வேலைக்காரன்’ தமிழகம் முழுவதும் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளது. ‘விவேகம்’ படம் ரூ.66 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இதையும் ‘வேலைக்காரன்’ முறியடிக்குமா? என்ற எத்ரிப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Leave a Reply