அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் தீரன் பட நடிகர்

கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடித்த போஸ் வெங்கட், தற்போது தல அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘விசுவாசம்’ படத்தில் அஜித்துடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் முக்கிய கேரக்டரில் போஸ் வெங்கட் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் அவருக்கு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது

மேலும் போஸ் வெங்கட் ஏற்கனவே அஜித் நடித்த ‘வீரம், மற்றும் என்னை அறிந்தால்’ படங்களின் வில்லன்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தல அஜித்துடன் முதல்முறையாக நடிக்க வாய்ப்பு கிடைத்த போஸ் வெங்கட் தற்போது உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளார்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *