shadow

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் உணவு இலவசம். தெற்கு ரயில்வே அறிவிப்பு

rp_train-300x156.pngதெற்கு ரயில்வே ரயில் பயணிகளுக்கு அவ்வப்போது சிறப்பான சலுகைகளை வழங்கி வரும் நிலையில் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் 100 பேர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளது.

ஏற்கனவே ரயில்வே துறை பயணிகளுக்கு டிக்கெட்டுடன் சேர்த்து உணவுக்கும் கட்டணம் வசூல் செய்து அவர்கள் ஆர்டர் செய்த உணவை வழங்கி வருகிறது. இந்த இகேட்டரிங் வசதி குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குறிப்பிட்ட சில ரயில்களில் முன்பதிவு செய்யும் 100 பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதி வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மட்டும் இப்போதைக்கு செயல்படுத்தப்படுகிறது. இலவச உணவுக்கு தேர்வு செய்யப்பட்ட பி.என்.ஆர். எண்களை கேட்டரிங் பிரிவுக்கு அனுப்பி பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து ஐ.ஆர். சி.டி.சி. கேட்டரிங் துணை பொது மேலாளர் கணபதி சுப்பிரமணியம் கூறியதாவது:- இந்த சிறப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 100 பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் தான் இந்த சலுகை கிடைக்கும். எத்தனைபேர் பயணம் செய்தாலும் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும் 100 பயணிகளுக்கு மட்டும் இலவசமாக உணவு வழங்கப்படும்.

Leave a Reply