shadow

திருட்டுப்பயலே’ இரண்டாம் பாகத்தில் பாபிசிம்ஹா-பிரசன்னா

1ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா மற்றும் பலர் நடிப்பில் பிரபல இயக்குனர் சுசிகணேசன் இயக்கிய ‘திருட்டுப்பயலே’ என்ற திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிக்கப்படவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த நிறுவனம்தான் இந்த படத்தின் முதல் பாகத்தையும் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருட்டுப்பயலே’ இரண்டாம் பாகத்தில் ஜீவன் நடித்த கேரக்டரில் பாபிசிம்ஹாவும், அப்பாஸ் கேரக்டருக்கு இணையான கேரக்டரில் பிரசன்னாவும் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நாயகியாகவும் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஸ்கிர்ப்ட் தயார் நிலையில் உள்ளதாகவும், இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் சுசிகணேசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply