shadow

salmankhan
பிரபல பாலிவுட் நடிகர் மது அருந்திவிட்டு கார் விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கிய கீழ் கோர்ட்டின் தீர்ப்பை மும்பை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டுள்ளதால் பாலிவுட் திரையுலகம் நிம்மதி அடைந்துள்ளது.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற சல்மான்கான் கார் விபத்து வழக்கில் நேற்று முன் தினம் அதிரடியாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என நிரூபணம் ஆகியுள்ளதாகவும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி அளித்த தண்டனையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் சல்மான்கான் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணை செய்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, ஜாமீனும் வழங்கி  உத்தரவிட்டார். இதனால் சல்மான்கான் தற்காலிகமாக ஜெயில் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார்.

சல்மான்கானை நம்பி சுமார் ரூ.300 கோடி முதலீடு செய்த பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பால் நிம்மதியடைந்துள்ளனர்.

Leave a Reply