shadow

பாலிவுட் அம்மா நடிகை மாரடைப்பால் மரணம்

பாலிவுட் உலகின் மூத்த கலைஞரும், பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்தவருமான ரீமா லாகு, மாரடைப்பால் மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 59

1970ஆம் ஆண்டு பாலிவுட்டில் தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்த ரீமா, ஷாருக்கான், சல்மான் கான் போன்ற பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் அம்மா கேரக்டர்களிலும், பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நேற்று இரவு, ரீமாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி ரீமா காலமானார். இவரின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Reply