shadow

சந்தானத்திற்கு வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்
santhanam
நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’ திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அவர் ஹீரோவாக நடித்த மற்றொரு படமாஅன ‘வாலிப ராஜா’ விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் மீண்டும் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த ஷான்யா என்ற புதுமுகம் நடிக்கவுள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்கிரார். திகில் மற்றும் காமெடி கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு  விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் சவுரப் சுக்லா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் ‘மும்பை எக்ஸ்பிரஸ், ஷங்கரின் ‘அந்நியன்’ மற்றும் ‘டேவிட்’ ஆகிய தமிழ்ப்படங்களில் ஏற்கனவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்பாலா இயக்கும் இந்த படத்தில் சவுரப் வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது.

Leave a Reply