shadow

‘போகன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜெயம் ரவி, அரவிந்தசாமி நடித்த ‘போகன்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. மெரீனா போராட்டத்தால் போலீஸ் மீது பொதுமக்கள் வெறுப்பில் உள்ள நிலையில் போலீஸ் பெருமை குறித்த படம் வருவது சரியானதல்ல என்று கோலிவுட்டில் பலர் கருத்து கூறினாலும் படக்குழுவினர் தைரியமாக வெளியிட்டனர்.

முதல் காட்சி முடிந்ததும் ஃபேஸ்புக், டுவிட்டரில் பகிரப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இந்த படத்திற்கு மாலை காட்சிகளுக்கு நல்ல கூட்டம் வந்தது. சென்னை திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் நிறைந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இந்த படம் நேற்று ஒரேநாளில் ரூ.44 லட்சம் வசூலாகியுள்ளது. ஜெயம் ரவியின் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா, அக்சரா கெளடா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை லக்ஷ்மண் இயக்கியுள்ளார்.

Leave a Reply