ஜெயம் ரவியின் ‘போகன்’ டீசர் ரிலீஸ் எப்போது?

boganஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் மீண்டும் தற்போது ‘போகன்’ என்ற படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி இணைந்து நடித்து வருகின்றனர்.,

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக ஜெயம் ரவி தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயம் ரவி தனது டுவிட்டரில் ‘Psych yourself up guys ? #Bogan teaser is coming to blow your minds on 4th Nov @ 5PM… #BoganTeaserfromNov4’ என்று கூறியுள்ளார்.

‘ரோமியோ ஜூலியட்’ இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா, அக்ஷரா கெளடா உள்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் பிரபுதேவா தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *