மகாபாரத திரெளபதி கு கிடைத்த கிரிக்கெட் வீரர் சித்துவின் பதவி.

1சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்ததால் அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவி காலியான நிலையில் தற்போது அந்த பதவிக்கு பிரபல நடிகை ரூபா கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளீபரப்பான மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் திரெளபதி வேடத்தில் நடித்த நடிகை ரூபா கங்குலி சித்துவுக்கு பதிலாக மாநிலங்களவை எம்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மேற்குவங்க சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடிகை ரூபாகங்குலி கூறுகையில்“ என்னை தேர்வு செய்த பாரதீய ஜனதா தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக நான் உழைப்பேன். எனக்கு அளிக்கப்பட்ட இந்த பொறுப்பில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பேன்‘ என்று கூறியுள்ளார்

BJP’s Roopa Ganguly nominated for Sidhu’s post in Rajya Sabha

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *