பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்: ஜீ தொலைக்காட்சிக்கு பாஜக கடிதம்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக காட்டிய ஜீ தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஜீ தொலைக்காட்சிக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து அவதூறு செய்யும் காட்சிகள் இருந்ததாகவும், நகைச்சுவை என்ற பெயரில் சிறுவர்களை வைத்து அவதூறு பரப்பிய ஜீ தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக ஐடி விங் தலைவர் ஜீ தொலைக்காட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக ஐடி விங் கடிதத்திற்கு ஜீ தொலைக்காட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும்