shadow

பீகார் தோல்வி எதிரொலி: பாஜக தலைமையின் திடீர் மனமாற்றம்
bjp
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து அந்த கட்சியின் தலைமை மூத்த தலைவர்களின் ஆலோசனையின்படி இனி நடந்து கொள்வதாக அறிவித்துள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி தீவிரமாக பிரச்சாரம் செய்து தோல்வியை தழுவியது. இதற்கு பாஜகவின் தலைமை தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை கட்சித்தலைமை மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. சத்ருஹன்சின்ஹா உள்பட பலர் வெளிப்படையாகவே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை இனிமேல் ஏற்க தயாராக இருப்பதாக பாஜகயின் முக்கிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்காரி, வெங்கையா நாயுடு ஆகிய அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில் இருந்து மீண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து கட்சி தலைவர்கள் கவலை கொண்டுள்ளதாகவும், பா.ஜ., மூத்த தலைவர்கள் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த தலைவர்களின்ஆரோக்கியமான முன்னுதாரணங்களையும், ஆலோசனைகளையும் ஏற்று கட்சி இனிமேல் செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply