shadow

 bjp meetingதமிழ்நாட்டில் வரும் 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா நேற்று சென்னையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
 
நேற்று முன் தினம் சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர், பா.ஜ.க.வின் 6 மாத கால ஆட்சியில் விலைவாசி உயர்வு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

திமுக, அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்ததால் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது என்று குற்றம்சாட்டிய அமித் ஷா, 2016ஆம் ஆண்டு நடைபெற்றவுள்ள சட்டசபை  தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவித்துவிட்டு அதன்பின்னர் தேர்தலை சந்திக்கும் என்றும், தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறினார்.

இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களை விடுவித்தது பா.ஜ.க.வின் சாதனைகளில் ஒன்று என்றும் அவர் பேச்சின் இடையில் தெரிவித்தார்.

Leave a Reply