shadow

இந்தியா முழுவதும் பாஜக ஆட்சி: நெருங்குகிறது டார்கெட்

சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, இன்னும் சில மாதங்களில் புதுச்சேரி தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சிதான் இருக்கும் என்று கூறினார். அவர் கூறியதுபோல் கிட்டத்தட்ட பாஜக தனது டார்கெட்டை நெருங்கிவிட்டது.

சமீபத்தில் நடந்த திரிபுரா, நாகாலந்து மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக , மேகாலயா மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.

உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய முக்கியமான பெரிய மாநிலங்களில் ஆட்சி புரிகிறது. இது தவிர சட்டீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஹரியானா, அசாம், கோவா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவின் ஆட்சியும், ஆந்திரா, காஷ்மீர், பீகார், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருவது தெரிந்ததே

காங்கிரஸ் கட்சி தற்போது கர்நாடகா, பஞ்சாப், புதுச்சேரி, மிசோரம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆட்சி புரிந்துவருகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இல்லாத மாநிலங்கள். தமிழகம், தெலங்கானா, ஒடிஷா, டெல்லி, மேற்கு வங்காளம், திரிபுரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply