shadow

பாஜக மேலிட பார்வையாளர் வந்தும் பிடிகொடுத்தாக விஜயகாந்த்

vijayakanthகடந்த வாரம் நடைபெற்ற காஞ்சிபுரம் தேமுதிக மாநாட்டில் கிங் ஆகத்தான் இருப்பேன் என்று தெரிவித்த விஜயகாந்த் இன்னும் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை. திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி ஆகிய கூட்டணிகள் விஜயகாந்தின் பதிலை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் நேற்று பாஜக மேலிட பொறுப்பாளர் ஜவடேகர் சென்னை வந்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்த ஜவடேகர் சுமார் 40 நிமிடத்திற்கும் மேலாக அவருடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேரம் படியவில்லையோ என்னவோ தெரியவில்லை வெளியே வந்த ஜவடேகர், தேமுதிகவுடன் கூட்டணியா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவெடுப்போம். எண்று செய்தியாளர்களிடம் கூறினார். அவர் சென்ற சில நிமிடங்களில் தேமுதிக தரப்பில் இருந்து இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

எனவே விஜயகாந்தை நேரில் சந்தித்த பின்னரும் பாஜக கூட்டணியால் கூட்டணி குறித்து ஒரு இறுதியான முடிவை வெளியிட முடியவில்லை. பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜவடேகர் கூறியபோது, “விஜயகாந்த்துடன் நடந்த சந்திப்பால் மகிழ்ச்சி அடைகின்றேன். சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது. பயனுள்ளதாக இருந்தது.கடந்த 24 மணி நேரத்தில், எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் நான் ஆலோசனை நடத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆலோசனைகள் குறித்து பாஜக தலைமையிடம் தெரிவிப்பேன். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தமிழகம் வந்து கூட்டணி தொடர்பான இறுதி முடிவை அறிவிப்பேன். தேமுதிக யாருடன் கூட்டணி சேரும் என்பது குறித்து இறுதியான முடிவை விஜய்காந்த் எங்களிடம் கூறவில்லை’ என்று கூறினார்.

Leave a Reply