shadow

‘இரட்டை இலை’ சின்னத்தை முடக்க பாஜக சதி: வைகைச்செல்வன் ஆவேசம்

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுக வெற்றி பெற்று வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் இரட்டை இலை சின்னம். பட்டிதொட்டியெங்கும் இந்த சின்னம் பரவியுள்ளதால் வேட்பாளர் யார் என்பது கூட தெரியாமல் இரட்டை சிலை சின்னத்திற்கு மக்கள் ஓட்டு போட்டு வந்தனர்.

ஆனால் தற்போது ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளதால் எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் ஒருசில பாஜக தலைவர்கள் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். இதுகுறித்து கருத்து கூறிய வைகைச்செல்வன், ‘பாஜக தலைவர்கள் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக தொடர்ந்து கூறிவருவதை பார்த்தால், அதற்கு பின் பெரும் சதி உள்ளதாக தெரிகிறது. திமுக.,விலிருந்து வைகோ பிரிந்த போது, திமுக சின்னம் முடக்கப்பட்டவில்லை. வைகோவும் உரிமை கோரவில்லை. ஆனால் இப்போது ஏன் இரட்டை இலையை முடக்குவது குறித்து பேசுகின்றனர் என்பது தெரியவில்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்கவேண்டும் என கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் விதமாக ஒபிஎஸ் செயல்பட்டு வருகிறார். ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கு பின் அவரின் தவறை உணர்ந்து மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்புவார் என வைகை செல்வன் கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மறுத்துள்ளார். எதற்கெடுத்தாலும் அதிமுக, பாஜகவை குற்றம்சொல்வதை பார்த்தால் எங்களை பார்த்து பயப்படுகிறது என்றே அர்த்தம். தமிழிசையும், ராஜாவும் ஒரு கட்சியின் சின்னத்தை முடக்க நினைக்கின்றனர் என்றால் மக்கள் எப்படி நம்புவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply