shadow

aam aadhmiஆம் ஆத்மி எம்.எல்.ஏவிடம் பேரம் பேசியதாக அக்கட்சி வெளியிட்டுள்ள வீடியோ குறித்து டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஷேர் சிங் தாகர் மற்றும் ரகுபிர் தயா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு கடந்த சில மாதங்களாக குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மியின் எல்.எல்.ஏக்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சிப்பதாக பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் டெல்லி பா.ஜ.க. துணை தலைவர் ஷேர் சிங் தாகர் மற்றும் ரகுபிர் தயா ஆகியோர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொஹானியாவிடம் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துவதோடுஅதற்காக பெரிய தொகை ஒன்றை அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருப்பது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ வெளியானதும் பாஜக தலைமை வீடியோவில் இருக்கும் ஷேர்சிங் தாகருக்கு பா.ஜ.க. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்த தாகர், ”நான் எந்த தவறும் செய்ய வில்லை என்பது எனக்கு தெரியும். நோட்டீஸ் கிடைத்ததும் எவ்வளவு விரைவில் விளக்கம் அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் விளக்கம் அளிப்பேன்” என்றார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1utIT8m” standard=”//www.youtube.com/v/EGPA-OsKgOg?fs=1″ vars=”ytid=EGPA-OsKgOg&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5079″ /]

Leave a Reply