மாணவர்களுக்கு இலவச லேப்டாப், 1GB இண்டர்நெட். பாஜக தேர்தல் அறிக்கை

உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி ஜனதா கட்சி கடும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் பல புதிய இலவச அறிவிப்புகளுடன் கூடிய தேர்தல் அறிக்கையை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. அதில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப்கள் வழங்கப்படுவதுடன், மாதம் ஒரு ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும் என பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

மேலும் 3 மற்றும் நான்காம் பிரிவு அரசு வேலைகளுக்கு நேர்காணல் ஏதுமின்றி ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 12ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளிப்பதுடன், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பட்டப்படிப்புக் கட்டணமும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர்களாகிய மாணவர்களை கவர்வதன் மூலம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்கிற பாஜகவின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *