Chennai Today News

தமிழிசைக்கும் வானதிக்கும் வித்தியாசம் தெரியாத பாஜகவினர்

தமிழிசைக்கும் வானதிக்கும் வித்தியாசம் தெரியாத பாஜகவினர்

சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றார் என்பது தெரிந்ததே. தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மை என்பதை போலத்தான் பாஜகவினர்களும் நடந்து கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு போஸ்டர் அடித்த பாஜகவினர் திருமண விழாவிற்கு வருகை தரும் தமிழிசை செளந்திரராஜனே வருக வருக என போஸ்டர் அடித்திருந்தனர்.

ஆனால் இந்த போஸ்டரில் வானதி சீனிவாசனின் படம் இருந்தது. தமிழிசைக்கும் வானதி சீனிவாசனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் இப்படிப்பட்ட தொண்டர்களை வைத்து கொண்டு பாஜக எப்படி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!