நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மோசடியில் புதிதாக ஆதித்ய பிர்லா குரூப் நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் நால்கோ, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மோசடி தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ தற்போது 14வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. புதிததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆதித்ய பிர்லா குரூப் நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் நால்கோ, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பாரக் மீது ஏமாற்றுதல், மோசடி, முறைகேடாக நிதியை கையாண்டது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த முறைகேடு சம்பவத்தில் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 192 சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு மற்றும் 1993 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு காலங்களில் சுரங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாகவும், சுரங்க ஒதுக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாகவும் 3 கட்ட விசாரணையை சிபிஐ முடித்துள்ளது.

Leave a Reply