shadow

இனிமேல்தான் நிஜமான ‘பிக்பாஸ்: பிந்துமாதவியை பின்னுக்கு தள்ளுவாரா ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒரு பங்கேற்பாளர்கள் கூட இல்லாமல் இருந்தது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் ஓவியாவுக்கு உண்மையாகவே போட்டியை கொடுக்க புதிய பங்கேற்பாளராக பிந்துமாதவி தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

ஓவியாவை மட்டுமே தனது போட்டியாளராக கருதி உள்ளே வந்திருக்கும் பிந்துமாதவி ஓவியாவுக்கு எதிராக எப்படி காயை நகர்த்த போகிறார் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இன்னும் சொல்ல போனால் இனிமேல்தான் உண்மையான பிக்பாஸ் ஆரம்பிக்கவுள்ளதாக அனைவரும் கருதுகின்றனர்.

மேலும் ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படையை போலவே பிந்துமாதவிக்கும் ஆர்மி, படைகள் ஆர்மபிக்கப்பட்டுள்ளதால் ஃபேஸ்புக், டுவிட்டரும் களைகட்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply