ரூ.4000-க்கு கூலி வேலை பார்த்த ரூ.6000 கோடி செல்வந்தர்

suratஒருசில லட்சங்கள் மற்றும் கோடிகளில் பணம் வைத்துள்ளவர்களே பந்தா காட்டி வரும் நிலையில் ரூ.6000 கோடிக்கு அதிபதியாக இருந்தும் தந்தை சொல்லை மதித்து ஒரு மாதம் ரூ.4000க்கு கூலி வேலை பார்த்துள்ளார் ஒரு 21 வயது இளைஞர்.

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தொலாக்கியா என்பாரின் மகன் ட்ராவ்யா தொலாக்கியா சமீபத்தில் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்து முடித்து நாடு திரும்பியுள்ளார். அவரிடம் அவரது தந்தை அவரிடம் பிசினஸ் பொறுப்புகளை ஒப்படைக்கும் முன்னர் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். தன்னுடைய பெயரை, செல்வாக்கை பயன்படுத்தாமல் ஒரு மாதம் ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் வேலையில்லா அனுபவம் மற்றும் பணம் சம்பாதிப்பதன் அருமை தெரியும் என்றும் கூறியுள்ளார்.

தந்தையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட ட்ராவ்யா தொலாக்கியா, கேரளாவில் பேக்கரியில் கூலி வேலை உள்பட ஒருசில வேலைகளை செய்து ரூ.4000 ஒரு மாதத்தில் சம்பாதித்துள்ளார். அவருடைய வேலைத்திறனை பார்த்து இம்ப்ரஸ் ஆன ஒரு தொழிலதிபர் தன்னிடம் வேலை பார்க்குமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த சமயத்தில் தனது தந்தையிடம் இருந்து போன் வந்ததால் வேலைதருவதாக கூறிய தொழிலதிபரிடம் உண்மையை கூறி, தான் வந்த நோக்கத்தையும் கூறி விடை பெற்று சென்றார்.

ஒரு மாத அனுபவம் குறித்து ட்ராவ்யா தொலாக்கியா கூறியபோது, இந்த ஒரு மாதத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு முக்கிய விஷயம், சக மனிதனுடன் அன்பும் கரிசனமும் கொண்டு பழக வேண்டும் என்பதுதான்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *