shadow

Gates Modiமைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், தனது மனைவி மெலிண்டா பில்கேட்ஸ் அவர்களுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.  அதன்பின்னர் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை பில்கேட்ஸ் தம்பதியினர் சந்தித்து பேசினர். புனித கங்கையை சுத்தப்படுத்தும் ‌மத்திய அரசின் திட்டம் குறித்து பில்கேட்ஸ் வெங்கையா நாயுடுவிடம் கேட்டறிந்தார்.

இந்தியாவில் உள்ள  அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா பில்கேட்ஸ் டிரஸ்ட் பெருமளவு நிதியுதவி செய்யும் என அப்போது உறுதி செய்யப்பட்டது. பில்கேட்ஸ் அவர்களின் டிரஸ்ட்டும் இந்திய நகர்ப்புற அமைச்சகமும், இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது.  

அடுத்ததாக உத்தரபிரதேச மாநில‌ முதலமைச்சர் அகிலேஷ் யாதவுட‌ன், பில்கேட்ஸ்  டெலிகான்பரன்ஸ் மூலம் சுகாதார திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசனை செய்தார். மேலும் பில்கேட்ஸ் தனது நிறுவனம் மூலம் வெள்ளத்தால் ‌பாதிக்ப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு முதல்கட்ட நிவாரண நிதியாக சுமார் 42 கோடி ரூபாய் அளிக்கப்படும் என கூறினார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1rolPYU” standard=”//www.youtube.com/v/AFFT4xtoB4M?fs=1″ vars=”ytid=AFFT4xtoB4M&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9726″ /]

Leave a Reply