shadow

ஓட்டு சீட்டு மூலமே தேர்தல்: அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன்

இந்தியாவில் மின்னணு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படுவதில் முறைகேடு நடப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அமெரிக்காவில் ஓட்டு சீட்டு மூலம் மட்டுமே தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கூறியுள்ளார்.

ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதை விரும்பாத ரஷியா ஓட்டுப்பதிவு கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்து ஓட்டுகளை டிரம்புக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் பில்கிளிண்டனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் ஒருசில மாகாணங்களில் ஓட்டுச்சீட்டு மூலமும், ஒருசில மாகாணங்களில் மின்னணு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடந்து வருகிறது. ஆனால் அமெரிக்கா முழுவதும் ஓட்டுச்சீட்டு மூலமே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அப்போதுதான் முறைகேடுகளை முழுமையான அளவில் தவிர்க்க முடியும் என்றும் பில்கிளிண்டன் கூறியுள்ளார்.

Leave a Reply