shadow

பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் 3வது இடம்
chess
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 8வது பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதலிடத்தை அமெரிக்க வீரரும், இரண்டாவது இடத்தை நெதர்லாந்து வீரரும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த அக்டோபர் 26ம் தேதி முதல் ஆரம்பமான பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் வெஸ்லி சோ, சீன கிராண்ட் மாஸ்டர் Ding Liren மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த அனீஷ் கிரி ஆகிய 4 கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றனர்

6 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 6வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், சீன கிராண்ட் மாஸ்டர் Ding Liren வுடன் மோதினர். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. ஏற்கனவே 4 சுற்றுகளில் டிரா செய்த ஆனந்த் இந்த போட்டியையும் டிரா செய்ததால் 5 டிராவுடன் 2.5 மட்டுமே எடுத்தார்.

ஆனால் நெதர்லாந்தைச் சேர்ந்த அனீஷ் கிரி, அமெரிக்காவின் வெஸ்லி சோ இருவரும் மூன்றரை புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இவர்களில் சாம்பியன் பட்டத்தை பெறுவது யார்? என்பதை முடிவு செய்ய டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அமெரிக்காவின் வெஸ்லி சோ வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். அனீஷ் கிரி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

Leave a Reply