shadow

jeans-indiangirlReutersபீகார் மாநில கிராமத்து பஞ்சாயத்து ஒன்றில் பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் என்ற மாவட்டத்தில் சிங்கா என்ற பஞ்சாயத்து நேற்று கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டத்தில் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவதும், செல்போன்கள்  பயன்படுத்துவதும் அவர்கள் வழிமாறி செல்ல முக்கியக் காரணங்களாக அமைகின்றது என்றும், அதனால் பெண்கள் இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய பஞ்சாயத்தின் பிரதிநிதி முகியா கிருஷ்ணா, “கல்லூரி,  பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் ஜீன்ஸ் அணிவது அவர்களுக்குப் பொறுத்தமற்றது. உடலின் அங்கங்களை காட்டும் ஜீன்ஸ் – டி-சர்ட் ஆடைகளை பெண்கள் ஒதுக்கவேண்டும்” என்று கூறினார்.

ஏற்கெனவே, பஞ்சாயத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, அவர்களுடைய குடும்பத்துப்  பெண்களுக்கு ஜீன்ஸ் மற்றும் செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply