shadow

பீகார்: 5 கட்ட தேர்தல் முடிந்தது. பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த கருத்துக்கணிப்பு
bihar
பிகார் சட்டமன்றத்தேர்தல் ஐந்து கட்டங்களாக நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. நேற்று நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் நிதிஷ் குமார் – லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளதால், பாஜக வட்டாரங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நேற்றைய இறுதிக்கட்ட தேர்தலுக்கு பின்னர் சி வோட்டர் மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் – லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி, மொத்தமுள்ள 243 இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.  

அதே சமயம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 111 இடங்களை கைப்பற்றும் என்றும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 10 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகா கூட்டணி, தீவிரமான பிரச்சாரம், பாஜகவின் மத சகிப்புத்தன்மை விவகாரம் ஆகியவைகளே லாலு-நிதிஷ்குமார் அணியின் சாதகமான அம்சங்கள் என இந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply