shadow

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி மற்றும் சுனிதா, ஷகிலாவின் மகள் மிளா, யாஷிகாவின் நண்பர் நிரூபன், விஜய் டிவி தொகுப்பாளினிகள் ஜாக்லின் மற்றும் பிரியங்கா, திருநங்கை நமீதா, தொழிலதிபர் ரேணுகா ப்ரவின், மலேசியாவை சேர்ந்த நதியாசிங் ஆகியோர்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழ் நடிகர் நிழல்கள் ரவி, அரசியல்வாதி அப்சரா ரெட்டி மற்றும் பாடகி சின்னபொண்ணு ஆகியோரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.