பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் யார் யார்?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஏற்கனவே எதிர்பார்த்தவர்களே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மகத், டேனியல், வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்தியநாதன், ரம்யா, செண்ட்ராயன், மும்தாஜ், ரித்விகா, தாடி பாலாஜி, ம்னம்தி, நித்யா , ஹாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய 16 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

17வது களத்தில் இறங்கப்படுவதாக ஓவியா அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் போட்டியாளர் இல்லை விருந்தினர் என்ற சஸ்பென்ஸை நான்கு மணி நேரம் கழித்து வெளியிட்டதால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஓரிரண்டு நாட்கள் மட்டும் ஓவியா பிக்பாஸ் வீட்டில் விருந்தினராக இருந்துவிட்டு வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை போல் போட்டி சுவாரஸ்யமாக இருக்குமா? அல்லது டல்லடிக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *