shadow

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் செல்லும் நடிகை

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரன் வைல்ட் கார்டு வழியாக செலலும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்பட்டூள்ளது.

தற்போது தமிழிலும், தெலுங்கிலும் ஒன்றாக பிக்பாஸ் சீசன் 2 நடந்து வருகிறது. தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் நடிகர் நானி தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தமிழ் நடிகை பூஜா ராமசந்திரன் நுழைந்துள்ளார். இவர் தமிழில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் வரும் ஜீவாவின் மனைவியாக நடித்திருந்தார்.

அது மட்டுமின்றி பூஜா, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘பிட்சா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தான் பிக்பாஸ் போட்டியில் நுழைவதாக அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

Leave a Reply