ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே ரைசாவுடன் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அடுத்ததாக ரஞ்சித் ஜெயகொடி இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான புரியாத புதிர் படத்தை இயக்கியவர் என்பது தெரிந்ததே

இதுகுறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது,

எனது அடுத்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். இந்த படம் தனது முதல் படம் போல் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையில், கருத்துள்ள ஒரு படமாக இருக்கும் என்றார்.

படஅதிபர்கள் போராட்டம் முடிந்த பிறகு இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு பிரம்மாண்டமான முறையில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *