shadow

ஜூலி, காயத்ரி செய்யும் தவறுகளை மன்னிக்கும் கமல், அரசியல்வாதிகளையும் மன்னிக்கலாமே!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருசில நேரங்கள் தவிர கமல்ஹாசன் பாரபட்சமாகவே நடந்து வருகிறார் என்பதே பலரது எண்ணமாக உள்ளது. ஜாதி காரணமாக காயத்ரியை கமல் காப்பாற்றுகிறார் என்று ஒருசிலர் கூறியது தவறுதான், ஆனால் காயத்ரியை கமல் காப்பாற்றவே இல்லை என்று கூறுவதை ஏற்று கொள்ளவே முடியாது. குறிப்பாக ஓவியாவை திட்டம் போட்டு கார்னர் செய்து வெளியேற்றிய காயத்ரியிடம் கமல் கடுமையாக நடந்து கொள்ளவில்லை

ஜூலி, காயத்ரி ஆகியோர் வீட்டை விட்டு செல்லும்போது அவர்களை மன்னித்து விடுங்கள் என்று கமல் கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இருவருக்கும் குவியும் மீம்ஸ்கள் உணர்த்துகின்றன.

ஜூலி, காயத்ரி வேண்டும் என்றே செய்த தவறுகளை மன்னிக்கும் பக்குவம் கமலுக்கு இருக்கின்றது என்றால் தமிழக அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளையும் அவர் மன்னிக்கலாமா! என்று டுவிட்டரில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply