அது ஒரு ஃபைவ் ஸ்டார் ஜெயில். பிக்பாஸ் வீடு குறித்து நமீதா

விஜய் டிவியில் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று அந்த வீட்டில் இருந்து நமீதா வெளியேறினார். இந்த வீட்டை விட்டு வெளியேறுவதில் தான் மகிழ்ச்சி அடைவதாக கூறிய நமீதா, சினேகனை மட்டும் அதிகம் மிஸ் செய்வதாக கூறினார்.

மேலும் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் கமல்ஹாசனிடம் அவர் பேசி கொண்டிருந்தபோது ‘பிக்பாஸ் வீடு தனக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் ஜெயில் போன்று இருந்ததாகவும், இன்னும் அதிக வசதிகள் செய்திருக்கலாம் என்றும் கூறினார்.

ஃபைவ் ஸ்டார் ஜெயில் என்று நமீதா கூறியபோது, ‘இல்ல இங்க வேற 5 ஸ்டார் ஜெயில்லாம் கூட இருக்கு’ என்று சற்று கிண்டலுடன் கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் யாரை சொல்கிறார் என்பது அனைவருக்கும் புரிந்ததால் பார்வையாளர்களிடையே கரகோஷம் விண்ணை பிளந்தது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *