shadow

குஜராத் மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி இராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று முதல் குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் அவர்கள் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக எம்எல்ஏக்கள் கூட்டம் காந்தி நகரில் நடைபெற்றது

112 எம்எல்ஏக்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பூபேந்திர பட்டேல் ஒருமனதாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இதற்கு முன்னர் அமைச்சராக கூட இருந்தவர் இல்லை என்பதும் இவர் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன