shadow

பூலோகம்-மதகஜராஜாவுக்கு நல்ல காலம் பிறந்தது. டிசம்பர் 24-ல் ரிலீஸ்?
vishal
ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள ‘மிருதன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி நடித்து கடந்த சில மாதங்களாக பெட்டிக்குள் முடங்கிக்கிடந்த ‘பூலோகம்’ திரைப்படம் தற்போது ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

‘பூலோகம்’ படத்தின் பைனான்ஸ் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், எனவே இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் இன்று இந்த படத்தின் டிரைலர் ரீலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம்ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ், நாதன் ஜோன்ஸ், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கல்யாணகிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதேபோல் விஷாலின் ‘மதகதராஜா’ திரைப்படத்தின் பிரச்சனைகளும் முடிந்துவிட்டதாகவும், கிறிஸ்துமஸ் திருநாளில் இந்த படத்தையும் ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

English Summary: Bhoologam and Madhakajaraja release date announced?

Leave a Reply