shadow

பொதுமேடையில் முதல்வர் மீது மையை தெளித்த இளம்பெண். பெரும் பரபரப்பு

aravindhசமீபத்தில் டெல்லி அரசு கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்ட போது அவர் மீது ஒரு பெண் மை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் வாகனங்களின் பெருக்கம் காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்து விட்டது. எனவே, மாசுபாட்டை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் டெல்லி மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஒற்றைப்படை பதிவு எண்ணில் முடியும் வாகனங்களும், இரட்டைப்படை பதிவு எண்ணில் முடியும் வாகனங்களும் வேறு வேறு நாட்களில் இயக்கப்படுவதுதான் அந்த புதிய திட்டம். அத்திட்டம், கடந்த 1–ம் தேதி முதல் 15–ம் தேதி வரை பரீட்சார்த்த முறையில் 15 நாட்கள் அமலில் இருந்தது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன்  ஒத்துழைப்பு கொடுத்ததால் இந்த திட்டம் வெற்றி அடைந்ததுடன், காற்று மாசுபாடும் குறைந்ததாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் வெற்றிக்காக டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை ஆம் ஆத்மி கட்சி நேற்று நடந்தது. சாத்ரசால் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டெல்லி போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் பேசத் தொடங்கியபோது, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த ஒரு பெண், திடீரென போலீஸ் தடுப்புகளை மீறி முன்னேறிச் சென்று, அரவிந்த் கெஜ்ரிவாலை நெருங்கி அவர் மீது மை வீசியதுடன், சில காகிதங்களையும் எறிந்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உடனே அந்த பெண்ணை பிடித்து அங்கிருந்து வெளியேற்றியதுடன், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறும்போது, ”இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவே தெரிகிறது. டெல்லி போலீஸாரும் பாதுகாப்பில் போதிய கவனம் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இந்தச் சதியில் அவர்களுக்கும் பங்கு உள்ளது. கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தி அவரை முடக்கிவிட்டு, டெல்லி அரசை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஆம் ஆத்மியின் திட்டங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதை பா.ஜ.க.வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அவர்கள் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்” என்று கூறினார்.

Chennai Today News: Bhavna, who threw ink at Arvind Kejriwal, had earlier blackened his posters

Leave a Reply