shadow

பொங்கல் போட்டியில் இருந்து திடீரென விலகிய திரைப்படங்கள்

பொங்கல் போட்டியில் இருந்து அரவிந்த்சாமி நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ மற்றும் விமல் நடித்த ‘மன்னார் வகையறா’ ஆகிய படங்கள் திடீரென விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வரும் பொங்கல் தினத்தன்று சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச், பிரபு தேவாவின் குலேபகாவலி, அரவிந்த்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல், விமலின் மன்னர் வகையறா, சண்முகப்பாண்டியனின் மதுர வீரன், சுந்தர் சியின் கலகலப்பு 2, விஜய்சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்பட 9 படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஏற்கனவே பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மற்றும் கலகலப்பு 2 ஆகிய படங்கள் பின்வாங்கியுள்ள நிலையில், தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல், மன்னர் வகையறா ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது. இந்த இரு படங்களும் ஜனவரி 26ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply